பள்ளி நகைச்சுவை

Webdunia

செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:06 IST)
சில பள்ளிகளில் நடக்கும் நகைச்சுவ

* செய்யாத வேலைக்கு தண்டனை

சிறுமி : அம்மா அம்மா இன்னைக்கு நான் செய்யாத ஒன்றிற்காக என்னை தண்டித்தார்கள்.
அம்மா : என்ன செய்யாத ஒன்றிற்காகவா? நான் நாளை பள்ளியில் வந்து கேட்கிறேன். ஆமாம் நீ என்ன செய்யலை?
சிறுமி : ஆசிரியர் வீட்டில் எழுதிவரச் சொன்ன வேலையை

* ஒருவர் தேர்வு எழுதச் சென்றார்.

கேள்விகள் அனைத்தும் அ அல்லது ஆ என்று இருந்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் போட்டு பூ வந்தால் அ என்றும், தலை வந்தால் ஆ என்றும் பதிலளித்தார்.

தேர்வு முடியும் நேரத்தில் மிகுந்த சோகமாக இருந்தார் அவர். அவரிடம் ஆசிரியர் கேட்டதற்கு, விடைகளை மீண்டும் சரிபார்க்கலாம் என்று நினைத்தால் அந்த நாணயத்தைக் காணவில்லை என்றார்.

* பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.

* ஆசிரியர் : பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே.... ஒண்ணுமே வரையாம வந்திருக்க?
மாணவன் : பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க.

ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?
மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.

* ஆசிரியர் : இந்த கணக்குல இவ்ளோ தப்பு இருக்கே. நீ ஒருத்தியே இவ்ளோ தப்ப எப்படித்தா செஞ்சியோ?
மாணவி : இல்ல டீச்சர். இந்த கணக்குப் போட எங்க அம்மாவும், அப்பாவும் கூட உதவி செஞ்சாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்