ரசிகர் மன்றம்

உமா, மன்சூர் அலிகான், பானு, மதன் பாப், ஜாகுவார் தங்கம், பாபு கணேஷ், போஸ் வெங்கட் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு எஸ்.தினேஷ்குமார். இசை எஸ்.பி.பூபதி எழுதி இயக்கியிருப்பவர் புகழேந்தி தங்கராஜ். தயாரிப்பு தாய் மூவி மேக்கர்ஸ்.

கதிரும் பாண்டியனும் துடிப்பும் ஆர்வம் உள்ள இளைஞர்கள். ஆனால் இவர்கள் இருவருமே வெவ்வேறு நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறவர்கள். நடிகர்களுக்கு மன்றம் அமைப்பது கட் அவுட், தோரணம் என்று காலத்தைப் போக்குகிறார்கள். தங்கள் அபிமான நடிகர்களுக்காக கதிரும் பாண்டியனும்அடிக்கடி மோதிக் கொண்டு எதிரும் புதிரும் ஆகிறார்கள். அந்த ஊரில் நிலத்தடி நீரை உறிஞ்சி மினரல் வாட்டர் கம்பெனி சுரண்ட நினைக்கிறது. அது பற்றிய விழிப்புணர்ச்சியின்றி அவ்வூர் இளைஞர்கள் சினிமா மயக்கத்தில் கிடக்கிறார்கள். அவ்வூருக்கு வரும் பாரதி டீச்சர் இளைஞர்களுக்கு படிப்படியாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி அவர்களை எப்படி பொறுப்புள்ள மனிதர்களாக மாற்றுகிறார் என்பது தான் "ரசிகர் மன்றம்" படக் கதை.

பாரதி டீச்சராக உமா நடித்திருக்கிறார். அதிர்ந்து வீர வசனம் பேசாமலேயே சாதித்துக் காட்டும் அருமையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். மன்சூர் அலிகான் இருவேடங்களில் வருகிறார். நடிகர் ரமேஷ்காந்த், எம்பி என.. வருகிறார். எம்.பி. பெண்மை கலந்து பேசி எரிச்சலூட்டுவது ஓவர். "தாமிரபரணி" நாயகி பானுவை இதில் அநியாயத்துக்கு வீணடித்துள்ளனர். அவருக்கு நல்லதாக நான்கு காட்சிகள் தந்திருக்க கூடாதா?

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அண்ணாச்சியாக வருகிறார். அவ்வப்போது மத்தியஸ்தம் செய்வதே அவரது வேலையாக இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் சினிமா மோகத்தில் சீரழிகிறார்கள். அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி வர வேண்டும். தங்கள் சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால் சாதிகக்லாம் என்பதெல்லலம் சரிதான். இக்கருத்தை சொல்ல சுவையான அழுத்தமான காட்சிகளால் சொல்ல வேண்டாமா..? அந்த விறுவிறுப்பு படத்தில் காணவில்லை. சில இடங்களில் டாக்குமெண்ட்ரி வாசம்.

சினிமா மயக்கத்தில் இருக்கும் கதிர், பாண்டியன் பெரும்பாலான காட்சிகளில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் முறைத்துக் கொள்வதும் எரிச்சலூட்டுகிறது.

படத்தில் ஆறுதலான விஷயம் பாடல்கள் குறிப்பாக புதுமுகக் கவிஞர் கதிர்மொழி எழுதியிருக்கும் பாடல் "தப்பெடுத்து அடிக்கையிலே" நச் வரிகளால் நிற்கிறது. சரியான பாடல்.

நல்ல கருத்தை சுவைப்படக் கூறியிருந்தால் ரசிகர் மன்றம் விழா கொண்டாடும் தகுதியைப் பெற்றிருக்கும். ஆனால்..?

வெப்துனியாவைப் படிக்கவும்