தெகிடி என்றால் தாயம் போன்ற சூதாட்ட விளையாட்டுகளை குறிக்கும் சொல். ஏமாற்றுவதையும் தெகிடி என்ற பெயரில் குறிப்பிடலாம். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு ஆப்டான பெயர்.
FILE
ஜனனி அய்யர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூருவிலிருந்து சென்னை வரும் அவருடன் அசோக் செல்வனுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த புதிய உறவு என்னென்ன தொந்தரவுகளை சிக்கல்களை அளிக்கிறது, அதனை அவர் எப்படி அவிழ்க்கிறார் என்பதை சொல்லும் படம் (என்று எளிமையாக சொல்லலாம்). அசோக் செல்வன் கிரிமினாலஜி படிப்பை முடித்த பட்டதாரி என்பது படத்தின் கூடுதல் சுவாரஸியம்.
ஒரு கொலையின் பின்னணியில் நடக்கும் க்ரைம் ட்ராமா இந்தப் படம். நாளைய இயக்குனர் செஷன் டூ வில் முதல் பரிசு வென்ற பி.ரமேஷின் முதல் படம். அபினேஷ் இளங்கோவன், சி.செந்தில்குமார் தயாரித்திருக்கும் படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் வெளியிடுகிறார்.
நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் நாளை நம்மை த்ரில்லடைய வைக்க வருகிறது தெகிடி. படத்தின் சிறப்பு அம்சம் இதன் நீளம். இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய படம் இது.