ஈரம் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கியிருக்கும் படம் வல்லினம். எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் மெகா படத்தயாரிப்புக்கு இடையில் சிக்கி கடையினமாக வெளிவருகிறது. நகுல் ஹீரோ.
FILE
விளையாட்டை மையப்படுத்தி சினிமா எடுப்பது தமிழில் அரிது. அதிலும் பாஸ்கட் பால் போன்ற ஒரு விளையாட்டு? அரிதிலும் அரிது. அந்த ரிஸ்க்கை துணிந்து இதில் எடுத்துள்ளார் அறிவழகன். நகுல் இதில் பாஸ்கெட் பால் ப்ளேயராக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் சவால், ஹீரோவைப் பார்த்தால் தோற்றத்திலேயே அவரின் விளையட்டு வீரர் லுக் தெரிய வேண்டும். இரண்டாவது ஓரளவுக்காவது பாஸ்கட் பால் ஆட தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டுக்காகவும் நகுலை ட்ரில் வாங்கியது படயூனிட். அவரும் முழுமையாக ஒத்துழைத்து, தமிழ்நாடு டீமில் இடம்பிடிக்கிற அளவுக்கு தோற்றத்தையும் திறமையையும் மெருகேற்றியுள்ளார்.
மிருதுளா பாஸ்கர், ஆதி, அதுல் குல்கர்னி, ஜெகன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். விளையாட்டை மட்டுமின்றி அதன் பின் இயங்கும் அரசியலையும் வல்லினத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் அறிவழகன். அந்தவகையில் இது வெறும் விளையாட்டு படம் மட்டுமில்லை. காதல், நட்பு எல்லாம் இதில் இயைந்து வருகிறது.
FILE
எஸ்.தமன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவிச்சந்திரனின் ஆஸ்கர் ஃபிலிம் தயாரிப்பு. படத்தின் ஒளிப்பதிவு பேசப்படும் என்பது யூனிட்டில் உள்ளவர்களின் பேச்சு.
நாளை வெளியாகவிருக்கும் வல்லினத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.