புலிவால் - முன்னோட்டம்!

வியாழன், 6 பிப்ரவரி 2014 (12:27 IST)
சென்னையில் ஒருநாள் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்திருக்கும் படம் புலிவால். மலையாளத்தில் லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ப்ரேம் தயாரித்த சப்பாகுருஸ் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம்.
FILE

புலிவாலை மாரிமுத்து இயக்கியுள்ளார். நடித்திருப்பது விமல், பிரசன்னா, இனியா, அனன்யா, ஓவியா, ஏ.வெங்கடேஷ். விமல் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்கிறவர். சக ஊழியை அனன்யா.

FILE
பிரசன்னா பணக்காரர். இவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பிரச்சனையை உருவாக்கும். அந்த வீடியோ வெளியாக காரணமாக இருப்பவர் விமல். எப்படி? ஏன்? என்ன நடந்தது? இந்த கேள்விகளுக்கான பதில்தான் புலிவால்.

ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு வைரமுத்து, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளனர்.

நாளை படம் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்