250 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய டிஷ்யூம் சோமன் இயக்குனராகியிருக்கும் முதல் படம் கடற்கரை.
சசி இயக்கிய டிஷ்யூம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடித்ததால் தனது பெயருடன் டிஷ்யூமை இணைத்துக் கொண்டுள்ளார்.
webdunia photo
WD
கனடா மில்லியோ படத்தை தயாரிக்கிறது. உளியின் ஓசை, கண்ணா நீ எனக்கு தாண்டா படங்களில் நடித்த எஸ்.ஊ. உதயா கடற்கரையில் நாயகனாக நடிக்கிறார். இரண்டு நாயகிகள். ஒருவர் நிவேதா. இன்னொருவர் ரிஷா.
கடற்கரை ரிசார்ட் ஒன்றில் நாயகன் பார்ட்டியில் இருக்கும் போது கொலை ஒன்று நடக்கிறது. அந்த பழி அவர் மீது அநியாயமாக விழ தனது குற்றமின்மையை நிரூபிக்க உண்மை குற்றவாளியை தேடத் தொடங்குகிறான் நாயகன்.
படம் நெடுக கிளாமர் காட்சிகள் வருகின்றன. உதயா, ரிஷா இடம்பெறும் பாடல் காட்சியொன்றை படு கிளாமராக எடுத்துள்ளனர்.
படத்துக்கு இசை அறிமுக இசையமைப்பாளர் கிஷோர்.
கடலும் கடல்சார்ந்த பகுதிகளிலும்; படத்தை எடுத்துள்ளனர்.