லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் சிலம்பாட்டம். முன்னணி கதாநாயர்களை வைத்து படம் தயாரித்த லஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு இது இருபத்தைந்தாவது படம்.
முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். சரவணன் இயக்கும் முதல் படம் இது. ஹீரோ சிலம்பரசன். ஹீரோயினாக நடிப்பது சனா கான். இன்னொரு கதாநாயகி சினேகா.
webdunia photo
WD
இதில் முதல் முறையாக பிராமண இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அக்ரஹாரத்து பெண்ணாக சனா கான் நடித்துள்ளார். சாதுவாக வரும் சிம்புவுக்கு கரடு முரடான பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. அது என்ன என்பது சிலம்பாட்டத்தின் சுவாரஸியமான பகுதி.
பிளர்ஷ்பேக் காட்சியில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சினேகா.
படத்துக்கு முதலில் இசையமைத்தவர் தினா. பிறகு அவரை நீக்கி விட்டு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாடலொன்று ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்தில் சிம்புவின் பெயர் விச்சு.
படத்தின் எடிட்டிங்கை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடத்தி புதுமை செய்துள்ளார் இயக்குனர் சரவணன்.
சிம்பு பிராமண இளைஞர், கரடு முரடான இளைஞர், ஸ்டைலிஷான இளைஞர் என மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
கரடு முரடான கேரக்டருக்காக உடல் எடையை அதிகரித்துள்ளார் சிம்பு.