துரை - முன்னோட்டம்!

கமர்ஷியல் இயக்குனர் ஏ. வெங்கடேஷும், ஆக்சன் கிங் அர்ஜுனும் கைகோர்க்கும் படம். பி.எல். தேனப்பனின் ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பு.
webdunia photoWD

அர்ஜுனின் முந்தையப் படம் மருதமலை கண்டபடி ஓடியதால், விற்பனை அமோகமாக இருக்கும் என சந்தோஷமாக இருக்கிறார் தேனப்பன்.

பத்மப்ரியா நடிப்பதாக இருந்த கிளாமர் ஹீரோயின் வேடத்தில் கீரத். துரையின் ஒவ்வொரு பிரேம் வளர்ச்சியிலும் கீரத்தின் கவர்ச்சி இருக்கிறது.

இது போதாது என்று மும்பையிலிருந்து சுமா என்ற டான்ஸரை அழைத்து வந்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் கஜாலா நடித்துள்ளார்.

வாத்தியார் படத்துக்குப் பிறகு அர்ஜுன், ஏ. வெங்கடேஷ் இணையும் படம்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று பொறுப்புகளையும் ஏற்றிருப்பவர் அர்ஜுன்.

600 அடி நீளத்திற்கு நீ...ண்ட சண்டைக் காட்சியொன்று படமாக்கப்பட்டுள்ளது.

அமித் என்ற பாலிவுட் நடிகர் வில்லனாக அறிமுகமாகிறார்.

அர்ஜுன் - விவேக் காம்பினேஷனில் காமெடிக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெடிகேம் ஆபரேட்டராக இருந்த லட்சுமிபதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத், சென்னை, பொள்ளாச்சி, சுவிட்சர்லாந்த் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடித்தியுள்ளனர்.