அந்தோனி யார் - முன்னோட்டம்!

செவ்வாய், 3 ஜூன் 2008 (17:14 IST)
அன்னம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி. விஜயகுமார் தயாரித்திருக்கும் படம் அந்தோனி - யார். கடலும் கடல் சார்ந்த பகுதியை, அம்மக்களை மையமாகக் கொண்ட கதை இது.

webdunia photoWD
ஷாம் நாயகன். அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் மல்லிகா கபூர். சி.டி. பாண்டி இயக்கம். பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஷாம் கடல் சார்ந்த கதைக் களத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இது.


படம் குறித்து...

தினா இசையமைத்துள்ளார். நடிகர் சிம்பு, அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து ஒரு பாடல் பாடயிருக்கிறார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் 25 லட்சம் செலவில் அரங்கு அமைத்து ஒரு பாடலை படமாக்கியுள்ளனர்.

நாகர்கோவில், உவரி, முட்டம், குலு-மணாலி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

ராஜ்விக்ரம் - பிரேம் சங்கர் வசனம்.

வில்லனாக மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.

இவருடன் பிரேம் சங்கர், ராஜேஷ், பிரகதி, நாஞ்சில் ரிச்சர்ட், லக்சா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.