ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இரண்டாவது படம் 'அறை எண் 305-ல் கடவுள்'. சாதாரண மனிதர்களான கஞ்சான கருப்புக்கும், சந்தானத்துக்கும் கடவுள் போல் வந்து உதவுகிறார் பிரகாஷ்ராஜ். அதுதான் படத்துக்கு இந்தப் பெயர்.
கஞ்சா கருப்பு, சந்தானம் இருவரும் ஹீரோக்கள். மதுமிதா, ஜோதிர்மயி ஹீரோயின்கள். முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ். இவர்களுடன் ராஜேஷ், இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய், மதன்பாப், குயிலி, சம்பத், வி.எம்.சி. ஹனி·பா, டெல்லி கணேஷ், சுகுமார், முத்துக்காளை, பெரியார்தாசன் என குட்டி கோடம்பாக்கமே நடிக்கிறது.
படத்தைப் பற்றிய முக்கிய செய்திகள்...
இசையமைப்பாளர் வித்யாசாகர் ராப், வெஸ்டர்ன், கிராமியம் என அனைத்து வகையிலும் பாடல்கள் அமைத்துள்ளார்.
முத்துலிங்கம், நா. முத்துக்குமார், பா. விஜய், யுகபாரதி, கபிலன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
பிரகாஷ் ராஜ் மகாவிஷ்ணுவாக தோன்றும் காட்சிக்கான மேக்கப் சாதனங்கள் மும்பையிலிருந்து வாங்கப்பட்டுள்ளது.
எஸ். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி. சசிகுமார் எடிட்டிங்.
கலை செல்வகுமார். நிலா போன்று பிரமாண்ட அரங்கு அமைத்து ஒரு பாடல் காட்சி எடுத்துள்ளனர். ரீ-மிக்ஸ¤ம் உண்டு.
சண்டைப் பயிற்சி கிரேட் செல்வா. சென்னை, பெங்களூரு, தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.