யுனிவர்சல் தவமணி சினி ஆர்ட்ஸ் வழங்கும் 'யாருக்கு யாரோ'

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (12:56 IST)
சாம் ஆன்டர்சன் நாயகனாகவும், ஜோதி மற்றும் வர்ணிகா என்ற மும்பை மாடலும் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, பயில்வான் ரங்கநாதன், சுருளி மனோகர், எல்ஐசி நரசிம்மன், ஸ்ரீகாமு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குறைந்த விலையில் கார்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ள கதாநாயகனை இரு கதாநாயகிகள் காதலிக்கிறார்கள். எந்தப் பெண்ணை, நாயகன் மணமுடிக்கிறார் என்பதை வித்தியாசமான, இளமையான கதைக் களத்தோடு தனக்கே உரிய புதிய பரிமாணத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை பொறுப்புகளை ஏற்று இயக்கியும் உள்ளார் அறிமுக இயக்குனர் ஜோ ஸ்டேன்லி.

சென்னையைச் சுற்றி படப்பை, மணிமங்கலம், சேத்துப்பட்டு, நெற்குன்றம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகள் வேகமாக நடைபெறுகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

ஒளிப்பதிவு - எடிசன் அமர்நாத்
எடிட்டிங் - முருகராம்
நடனம் - ராம்
தயாரிப்பு மேற்பார்வை - விஜய்
தயாரிப்பு - ஈரோடு என். ஜெயகுமாரி

வெப்துனியாவைப் படிக்கவும்