இந்திரன், எமதர்மன், நா. அழகப்பன் என மூன்று வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.
இந்திரலோகத்தில் ரம்பா கேரக்டரில் தீத்தா சர்மா என்ற மும்பை அழகி அறிமுகமாகிறார். ஊர்வசியாக சுஜாவும், மேனகையாக கேரளாவை சேர்ந்த ராரீ என்பவரும் அறிமுகமாகிறார். மேலும் நாசர், தியாகு, மனோபாலா, குமரிமுத்து, ஓஏகே சுந்தர், இளவரசன், பெங்களூரிலிருந்து ரிஷிவந்திகா, உஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு பாடல் காட்சிக்காக மும்பையிலிருந்து 40 மாடல் அழகிகள் வரவழைக்கப்பட்டு பாடல் காட்சி படமானது. இந்திரலோகத்தில் தேவகன்னிகைகளாக பெங்களூரிலிருந்து 100 அழகிகள் அழைத்து வந்து 25 நாட்கள் நடித்தார்கள்.
பிரசாத் ஸ்டூடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்திரலோகம் செட் போடப்பட்டது. இதையடுத்து எமலோகம் செட் அடுத்தமாதம் போடப்படுகிறது. பின்பு பூலோக காட்சிகளை அம்பாசமுத்திரம், மதுரை பகுதிகளில் படமாக்குகின்றனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - தம்பி ராமையா இசை - சபேஷ் முரளி ஒளிப்பதிவு - கோபிநாத் எடிட்டிங் - ஹர்ஷா கலை - தோட்டாதரணி ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் நடனம் - சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வை - எம். கதிரேசன் தயாரிப்பு நிர்வாகம் - சுப்ரமணி தயாரிப்பு - மாணிக்கம் நாராயணன்