10 மாவட்டங்களில் படமாகும் "மச்சக்காரன்"

"எதுவுமே கிடைக்காத ஒருவனுக்கு எல்லாமே கிடைக்கிற ஒரு பொன்னு கிடைச்சா எப்படியிருக்கும்?"

எப்படியிருக்கும்? என்று எதிர் கேள்வி கேட்டால் "அத மச்சக்காரன் பார்த்து தெரிஞ்சுக்குங்க" என அழகாக படத்தின் ஒன்லைன் சொல்லி எதிர்பார்ப்பை கூட்டுகிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

"கள்வனின் காதலி"க்கு பிறகு தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் மச்சக்காரனாக ஜீவனும் மச்சக்கரானிடம் மனசை பறிகொடுக்கும் காதலியாக காம்னாவும் நடிக்கின்றனர். நாயகனின் பெற்றோராக வினோத்ராஜ்-அஞ்சலிதேவி நடிக்க, ரமேஷ்கண்ணா, சுமன் ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி கூட்டணி காமெடி காக்டெயில் வழங்கவுள்ளனர். வில்லனாக கன்னட சோப்ராஜ் மிரட்டவுள்ளார்.

"திருட்டு பயலே" ஜீவனையும் "இதயத்திருடன்" காம்னாவையும் ஜோடி சேர்த்திருக்கீங்க கிளாமருக்கும் பஞ்சமிருக்காதே?

"ரசிக்கும்படியான கிளாமர் உண்டு. மற்றபடி இது ஹோம்லி சப்ஜெக்ட் தான்" என திருக்குறள் சைஸில் விளக்குகிறார். "படத்தை ஒரு விசேஷம் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 16 நாட்கள் நடந்துள்ளது. இதில் ஜீவன்-காம்னா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாகியுள்ளது" என்ற தமிழ்வாணன், ஆஸ்திரேலியாவில் 2 பாடல் காட்சிகள் படமாகவுள்ள தகவலையும் சொன்னார்.

குட்டி இசைஞானி யுவன் தான் இசையமைப்பாளர். ஏப்ரல் 2ந் தேதி மலேசியாவில் கம்போஸிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது "மச்சக்காரனை" மெட்ராய் எண்டெர்டெண்மென்ட் என்னும் புதுப்பட நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு: நந்தகோபால். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தமிழ்வாணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள

கலை: ரம்யன், எடிட்டிங்: ஆண்டனி, ஒளிப்பதிவு: ஏ.வெங்கடேஷ், இசை: யுவன், இணை தயாரிப்பு: நந்தகோபால், தயாரிப்பு: மெட்ராஸஎண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: தமிழ்வாணன்.

வெப்துனியாவைப் படிக்கவும்