பாடல்களே இடம் பெறாத படத்தில் விளம்பரத்திற்காக ஒரு பாடல்

அரசியல் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், நம்நாடு படத்தில் அரசியலை புதிய சிந்தனையோடு, மாறுபட்ட கோணத்தில் கையாண்டிருகிறார் இயக்குநர் சுரேஷ். அன்றைய அரசியல்வாதிகள் நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இன்றைய அரசியல்வாதிகளோ தங்களின் சுயநலத்துக்காக உழைத்துக் கொண்டிருகிறார்கள். இந்த நிலை மாறி, சேவை மனப்பான்மை கொண்ட தலைவர்கள் மீண்டும் வர வேண்டும். அப்போதுதான் நம் நாடு முன்னேறும் என்ற புரட்சிகரமான கருத்துக்களை சரத்குமார் வழியாக சொல்வதன் மூலம் இன்றைய அரசியலில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கும் முயற்சியை செய்கிறது நம்நாடு படம்.

அரசியல் பின்னணி இருந்தாலும், நம்நாடு படம் அடிப்படையில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய குடும்பப்படமே! சுருக்கமாக சொல்வது என்றால் ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தின் கதையே இது.

ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவராக, முத்தழகன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் பிறகு உள்துறை அமைச்சராக உருவெடுக்கிறார். அவர் எப்படி இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்தார் என்பதுதான் நம்நாடு படத்தின் மிக முக்கியமான திருப்பம் மற்றும் சுவாரஸ்யம். உள்துறை அமைச்சரான சரத்குமாருக்கும், அவரது அப்பாவான கல்வி அமைச்சர் நாசருக்கும் இடையில் நடக்கும் போரட்டம்தான் இப்படத்தில் பரபரப்பை பத்த வைக்கும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

அது மட்டுமல்ல. சரத்குமாருக்கு பன்ச் டயலாக்குகளும் பஞ்சமில்லாமல் இடம் பெற்றிருக்கின்றன நம்நாடு படத்தில்! இப்படத்தின் வசனகர்த்தா நடிகர் ரமேஷ்கண்ணா! அடிப்படையில் இயக்குநரான இவர் பன்ச் டயலாக்கில் பட்டையைக் கிளப்பியிருக்கறார். நம்நாடு படத்தில் சரத்குமார் பேசும் ஒவ்வொரு வசனமும் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைக்கப்போவது உறுதி. திரையரங்கங்களில் எழும் கைதட்டலில் காதுகள் காயப்படும். வசனகர்த்தாவான ரமேஷ்கண்ணா நம்நாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்