மனைவியுடன் ஹனிமூன் சென்று வந்திருக்கும் நரேனுக்கு அஞ்சாதே வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒவ்வொரு திரையரங்காகச் சென்று ரசிகர்களின் 'ரியாக்சனை' கவனித்து வரும் நரேனின் உற்சாக பேட்டியிலிருந்து...
ஏன் திடீரென்று ஆக்சன் படம்?
நான் அறிமுகமான சித்திரம் பேசுதடியே ஆக்சன் படம்தான். பள்ளிக்கூடம் படத்தில் சாஃப்ட் கேரக்டரில் நடித்த பிறகு அந்த மாதிரியே வாய்ப்புகள் வந்தது. பேராசிரியர், டாக்டர் இந்த மாதிரி. அதை எதையும் நான் ஒத்துக்கவில்லை. அப்போதுதான் மிஷ்கின் அஞ்சாதே கதை சொன்னார். எனக்குப் பிடித்தமான கேரக்டர்.
இனி மென்மையான கேரக்டரில் நடிக்க மாட்டீர்களா?
இப்போதைக்கு ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
அடுத்து என்னென்னப் படங்களில் நடிக்கிறீங்க?
எந்தப் படமும் முடிவாகலை. இரண்டு புதிய இயக்குனர்கள் கிட்ட கதை கேட்டிருக்கேன். இரண்டுமே நல்ல ஸ்கிரிப்ட். இரண்டும் ஆக்சன் கதைதான்.
அஞ்சாதே ஓடும் திரையரங்குகளுக்கு நேரடியாகப் போய் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிச்சு வர்றீங்க. அவங்களுக்கு உங்களிடம் எது பிடிச்சிருக்கு?
நான் குடிச்சிட்டு உளர்ற சீனை எல்லோரும் ரசிச்சுப் பார்க்கிறாங்க. அஞ்சாதேயில் நான் கஷ்டப்பட்டு நடிச்ச காட்சிகளில் அதுவும் ஒண்ணு. குரலை மாத்திப் பேச கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்புறம், முகத்துல சோர்வை காட்டணும்.
அது ரொம்ப இயல்பா இருந்தது....
அந்தக் காட்சியில நடிக்கிற போது ராத்திரி மணி இரண்டு. சோர்வு தெரியணும்கிறதுக்காக அந்த இடத்தைச் சுற்றி பலமுறை ஓடினேன்.
எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
ரஜினி சாரோட ரோபா படத்துக்கு வில்லன் தேடுறதா கேள்விப்பட்டேன். ரஜினி சாருக்கு ஓ.கே.ன்னா அவருக்கு வில்லனா நடிக்க நான் தயார். ரஜினி சார் கூட நடிக்கணும்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை!