கமர்ஷியல் கெட்ட வார்த்தையல்ல - விக்ரம்

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:59 IST)
இப்போது விக்ரமுக்குள் வியாபித்திருக்கும் பாத்திரம் கந்தசாமி. 'பீமா'-வில் இருந்து மெல்ல விடுதலையாகி 'கந்தசாமி'க்குள் நுழைந்திருக்கிறார். இனி கந்தசாமியையும் விக்ரமையும் பிரிக்க முடியாது. பீமாவுக்காக உடல் கனத்து முறுக்கேற்றியவர் இப்போது கந்தசாமிக்காக இளைத்து இளமைக் களை கட்டியிருக்கிறார்.

இனி கந்தசாமி alias விக்ரமுடன்...!

'பீமா'விலிருந்து 'கந்தசாமி' எவ்விதத்தில் வேறுபடுகிறான்...?

இரண்டு படங்களும் வேறுவேறு ரகம். இரண்டு நிறம், மணம், குணம் கொண்டது. இரு படங்களையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. அந்த அளவுக்கு கதைக்களம் காட்சிக்கான தளம் எல்லாவற்றிலும் வேறு வேறு திசை. வேறு வேறு பயணம்.

ஒன்று எல்லாரையும் கவலைப்பட வைக்கிற நிழல் உலகத்தைப் பற்றியது. இன்னொன்று எல்லாருக்காகவும் கவலைப்படற ஒரு குடிமகன் பற்றியது.

கந்தசாமி படத்தின் கதை என்ன...?

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தாரக மந்திரமா இருக்கு. நாம் இந்தியர் நம்நாடு இந்தியாங்கிற உணர்வு நம் எல்லோருக்கும் இருக்கு. ஆனாலும் இந்த வேற்றுமை... ஒவ்வொன்றுக்குமான இடைவெளி அதிகமாய்ட்டே போகுது.

webdunia photoWD
இந்த ஏற்றத்தாழ்வை ஏன்னு கேள்வி கேட்கிற படம்தான் கந்தசாமி. வித்தியாசமான அணுகுமுறை. கமர்ஷியல் எல்லைக்குள்ளும் இருக்கும். இதுவரைக்கும் தான் நான் சொல்ல முடியும். கந்தசாமி யார்? படம் எப்படி இருக்கும்ங்கிறதை ஒரு முன்னோட்டம் போல டைரக்டர் சுசி கணேசன் விளம்பரங்களில் சொல்லிட்டார்.

கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் நடிப்பது பற்றி...?

ஹீரோவா நடிக்கிறவங்களுக்கு சில ஆசைகள் இருக்கும். இந்த டைரக்டர் படங்களில் நடிக்கணும். இந்த கேரக்டரில் நடிக்கணும்னு ஆசைப்படுவாங்க. அதே போலவே குறிப்பிட்ட பேனர்ல நடிக்க விரும்புவாங்க. நான் விரும்பிய பேனர் இது. தாணு சார் ஒரு படத்தை - நடிக்கிற ஹீரோவை எந்த அளவுக்கு ப்ரமோட் பண்ணணுமோ அந்த அளவுக்கும் மேலேயே செய்றவர்.

அவர் கம்பெனியில 'கந்தசாமி' நடிக்கிறது சந்தோஷமா இருக்கு. எலெக்ட்ரானிக் இன்விடேஷன் தொடங்கி ரெண்டு கிராமங்களை தத்தெடுத்திருக்கிறது வரை எவ்வளவோ செய்து அசத்தியிருக்கிறார். இது ஆரம்பம்தான். இன்னும் எவ்வளவோ செய்யப் போறார். ஒரு டைரக்டருக்கும் நடிகருக்கும் இப்படி புரொடியூசர் கிடைக்கிறது பெரிய விஷயம்தான். அவர் கொடுத்த தைரியம் - ஊக்கத்தால தான் படம் ஆரம்பிக்கும் முன்னாடியே ட்ரெய்லர் தயார் செய்ய முடிஞ்சுது. இது யாரும் செய்யாத முயற்சி.


கந்தசாமி கமர்ஷியல் படமா?

'கந்தசாமி' கமர்ஷியல் படம்தான். 'பீமா'வும் கமர்ஷியல் படம்தான். கந்தசாமி டைரக்டர் சுசி. கணேசன் ரொம்ப சின்சியர் ஒர்க்கர். ராப்பகலா இதே நினைப்பு... இதே சிந்தனை அவரோட சிந்தனை நாவல்டியாவும் இருக்கும். கமர்ஷியலாவும் இருக்கும். இந்த ரெண்டுமே அவர்கிட்டே இருக்கும். அதனால எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தாச்சு. என்ன கேட்டீங்க... கந்தசாமி... பக்கா கமர்ஷியல் படம்தான்.

சேது, காசி ஒருபுறம் நடித்து விட்டு கமர்ஷியல் படங்களிலும் நடிப்பது ஏன்?

கமர்ஷியல்ங்கிறது கெட்ட வார்த்தையல்ல. ஹிட்டான படம் எல்லாமே கமர்ஷியல் படம்தான். 'சேது' 'காசி' போல சீரியஸ் சப்ஜெக்ட்களும் எனக்கு தேவை. 'மஜா' மாதிரியான படங்களும் எனக்குத் தேவைதான். ஒரு 'சேது' தான் வர முடியும். நடிக்கிற எல்லாமே எப்படி சேதுவாகிவிட முடியுமா?

விக்ரம்னா 'சேது' மாதிரி படம் மட்டுமே பண்ணுவார்னு முத்திரை விழுந்து விடக்கூடாது. எல்லா மாதிரியான கதைகளிலும் நடிப்பேன்னு சொல்லணும். அதனால்தான் 'மஜா' மாதிரி படத்தை செலக்ட் பண்ணி நடிச்சேன். எனக்கு ஒரு படத்தின் மூலம் ஒரு இமேஜ் வந்துச்சுன்னா என் அடுத்த படம்தான் அதை உடைச்சு ஆகணும். 'மஜா' இமேஜை 'அந்நியன்' உடைச்சுது. இப்படி மாறி மாறி நடக்கும். சீரியஸ் இமேஜை கமர்ஷியல் பட ஹிட் தான் மாற்றும். ஒரு நடிகனுக்கு கமர்ஷியல் பட வெற்றியும் முக்கியமா வேணும்.

இவ்வளவுக்குப் பிறகும் ஹோம் ஒர்க் செய்கிறீர்களே... பயம்தானே?

என் ஒவ்வொரு படமும் எனக்கு முதல்படம் மாதிரிதான். புதுசா வர்ற ஒவ்வொரு நடிகரும் கூட எனக்கு போட்டியாத்தான் உணர்வேன். அதனால ஒவ்வொரு படத்திலும் பயத்தோட - அக்கறையோட - சின்சியரா ஒர்க் பண்றேன். ஒரு கேரக்டர் எனக்குள் புகுந்திடுச்சுன்னா - எனக்குள் நுழைஞ்சு என்னை ஆட்டி வைக்கிற அளவுக்கு ஆக்கிரமிக்க விட்டுடுவேன். அதுக்கு அது சம்பந்தமா யோசிச்சு, தகவல் திரட்டி, உற்று நோக்கி ஹோம் ஒர்க் பண்ணி கேரக்டர் நல்லா வர உழைப்பேன். இது மிக முக்கியம்.