ஒரே மாதிரி நடிப்பதில் உடன்பாடு கிடையாது...பாலாஜி!

சித்தி சீரியலில் கதிகலங்க வைத்தவர் டேனியல் பாலாஜி. அந்த சீரியல் பார்த்த அத்தனை பேருக்கும் எளிதில் மறக்க முடியாத கேரக்டர். ஓவர் நைட்டில் சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தார். படம் காக்க காக்க. சூர்யாவோடு சேர்ந்து நான்கு போலீஸஅதிகாரிகளில் ஒருவராக வந்து.. அதிலும் மனதை தொட்டவர். அடுத்து வேட்டையாடு விளையாடு. மிக கொடூரமான வில்லனாக நடித்து எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தார்.அடுத்து?

"இந்தக் கேள்வி தான் எனக்குள்ளே ஒடிக்கொண்டிருக்கிற ஒரே பிரச்சினை. எனக்கும் நடிகனாகனும்கிறதை விட இயக்குனராகி விட வேண்டும் என்பது தான் ஆசை. அப்படித் தான் நண்பர் கௌதம் டீமில் செட்ட்டிலானேன். காக்க காக்க படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு நீயே பண்ணலாமேடான்னு கேட்டார். சரின்னு நடிக்க ஆரம்பிச்சேன். அது முடிந்ததும் அதே படத்தை தெலுங்கில் எடுத்தார். அங்கே போய் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். அப்படியே வேட்டையாடு விளையாடு.ரொம்ப ரிஸ்க்கான கேரக்டர்.. வேற யாரும் பண்றதைவிட நீ நடிச்சால் பேசப்படும்னு சொன்னார். அதே மாதிரி எல்லாருமே அந்த கேரட்டர் பத்தி பேசி முடிச்சிட்டாங்க! ஆனால் சினிமாவில் சிலர் அதை மறக்கவே இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா.. வர்ற அத்தனை பேரும் அதே மாதிரி கதையோட வர்றாங்க. ஒரே மாதிரி எத்தனை நாளைக்கு தான் நடிக்க முடியும்? அதான் வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்று எடுத்த எடுப்பிலேயே ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

"அப்போ..என்னதான் பண்றதா உத்தேசம்?"

"நடிப்பு தான் வித்தியாசமான கதைகளை தேடிக்கிட்டிருக்கேன். ஹீரோவா பண்ணச் சொல்லி சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. இப்போ.. கௌதமோட சேர்ந்து வாணரம் ஆயிரம் போய்கிட்டிருக்கு. என்ன கௌதம் படத்தில் மட்டும் தான் நடிப்பீங்களானு கூட சில நண்பர்கள் கேட்டுட்டாங்க. என்ன பண்றது நமக்கு செட் ஆகிற டீம் கூட சேர்ந்து ஒர்க் பண்றப்போ நம்ம வீட்டில் இருக்கிற மாதிரி கம்போர்டபிளா இருக்கு அதான் கௌதம் கூப்பிட்டா அப்படியே ஒடிப்போயிடறேன். இந்தப் படம் முடிந்ததும் நானே ஒரு படத்தை இயக்கலாமானுகூட யோசிச்சுக்கிட்டிருக்கேன்."

"வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"இதுல நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? எல்லாம் சினிமா தானே! நடிக்கிறதுக்கு வந்திட்டால் இதுதான்னு எதிலும் பிக்ஸஆகிடக்கூடாது. முதல் முறை கௌதம் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக்கிட்டேன். மறுபடியும் அதே மாதிரி கேட்டப்போதான் மாட்டேன்னு சொன்னேன். இதைவிட பேசப்படற கேரக்டர்னா யோசிக்காமல் நடிக்க நான் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்