இயக்குனர் அமீர் கொடுத்த வாழ்க்கை இது... சரவணன்

அக்கரை சீமை படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சரவணன். அதை தொடர்ந்து முப்பதுக்கும் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடுவில் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பருத்திவீரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரீ ஆகியிருக்கிறார். படம் எகிடுதப்பாக ஹிட்டாகியிருக்கிறது. அந்த உற்சாகத்தில் இருந்தவரோடு எடுத்த பேட்டி இது.

"வாழ்க்கையில் அடுத்து என்ன பண்றதுங்கிற வழி தெரியாமல் முடங்கிப் போயிருந்த நேரத்தில்தான் அமீர் சார் என்னைக் கூப்பிட்டு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். இது நாள் வரை சரவணன்னு ஒரு நடிகன் இருக்கிறான்கிறதையே பல பேர் மறந்துவிட்ட சூழ்நிலையில் இந்தப் படம் வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. படம் ரிலீஸான அடுத்த நாள் என்னோட சொந்த ஊரான சேலத்துக்கு போயிருந்தேன். எங்கே போனாலும் கூட்டம் சேர்ந்திடும்... ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு என்னவோ அவங்களே செயிச்சிட்ட மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க" என்று அவராகவே பேச ஆரம்பித்து "எல்லாத்துக்கும் காரணம்.. இயக்குனர் அமீர் சார் தான்" என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

"இப்படி ஒரு வெற்றி கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?"

"சத்தியமா கிடையாது சார். எனக்கு அமீர் சாரை நந்தா படத்தில் ஒர்க் பண்ணும் போது தான் பழக்கம். ஸ்பாட்ல ரொம்ப அமைதியா இருப்பார். பார்க்கிறவங்களுக்கு அவரு பெரிய கரடுமுரடான ஆள் மாதிரி தெரியும். ஆனால் ரொம்ப கலகலப்பானவர். நந்தாவில் பெரிசா கேரக்டர் கொடுக்க முடியலேன்னு வருத்தப்படுவார். அதை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு இந்தப் படத்துக்கு கூப்பிட்டிருப்பார்போல! சித்தப்பா கேரக்டர் ஒன்னு இருக்கு கொஞ்சம் வெயிட்டை குறைச்சிட்டு வாங்கண்னு சொன்னார். நானும் படாத பாடெல்லாம் பட்டு பதினெட்டு கிலோ எடையைக் குறைச்சேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இதுக்காக உழச்சிருக்கோம். அவர் எதிபார்த்த மாதிரி காட்சி வரலேன்னா.. லேசுல விடமாட்டார். எனக்கு கூட என்னட்டா இப்படியெல்லாம் வேலை வாங்குறார்னு தோணும். படம் ரிலீஸான பிறகு தான் தெரியுது எதுக்காக இவ்வளவு வேலை வாங்கினார்னு! எல்லாத்துகும் சேர்த்து பலன் கிடைச்சிருக்கு சார்"

"படத்தில் உங்களுக்கு பிடிச்ச காட்சி ஏதாவது?"

"படத்தில் ஒரு காட்சியில் போலீஸஸ்டேஷன் முன்னால என்னையும் கார்த்தியும் டவுசரோட உட்கார வச்சு போட்டோ எடுக்கிற மாதிரி ஒரு காட்சி எடுத்திருப்பார். எங்கப்பா போலீஸஆபீசரா இருந்தவர். சின்ன வயசிலேருந்தே போலீஸஸ்டேஷன் நமக்கு பழக்கமானது தான். மரியாதைக்கும் பஞ்சமிருக்காது. அப்படி இருந்தவனை இப்படி உட்கார வச்சிட்டாங்களேன்னு அந்த காட்சி எடுக்கும்போது நினைச்சேன். தியேட்டர்ல அதுக்கு விழுந்த க்ளாப்ஸஇன்னும் காதுக்குள்ளே கேட்டுக்கிட்டு இருக்கு!"

"படம் பார்த்திட்டு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?"

"எங்க வீட்டுல சொன்னது இருக்கட்டும்.. நேத்து ரஜினி சார் படம் பார்த்தார். அவரோட ஃப்ரெண்ட்ஸரெண்டு பேர் வந்திருந்தார்கள். படம் பார்த்திட்டு யார்யா டைரக்டர்.. எந்த ஊரு.. என்ன வயசிருக்கும்னு வரிசையா கேள்வி கேட்டு மனசு திறந்து பாராட்டிட்டு போனார். ராத்திரி வீட்டுக்கு போய் அமீர் சாருக்கு போன் போட்டு சொன்னேன். பேசிக்கிட்டிருக்கும் போதே இன்னொரு போன்... பார்த்தால் ரஜினி சார்! மறுபடியும் பாராட்ட ஆரம்பிச்சிட்டார். நான் இதை எதிர்பார்க்கலை.. சரவணன் உங்களுக்கு மிகப்பெரிய ரீ எண்ட்ரீ கிடைச்சிருக்கு கக்ரெக்டா யூஸபண்ணிக்குங்க என்று சொன்னார். அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார். இப்படி மனசு திறந்து பாராட்டினதை நினைக்கிறப்போ விருது கிடைச்ச மாதிரி மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க. இதுக்கு காரணம் அமீர் சார்தான்" என்று மறுபடியும் இயக்குனர் அமீர் பற்றி பேச ஆரம்பிக்கிறார். அநியாயத்துக்கு விசுவாசமா இருக்கீங்களே!

வெப்துனியாவைப் படிக்கவும்