சன்னி லியோனின் சரித்திர வெற்றி

செவ்வாய், 25 மார்ச் 2014 (09:51 IST)
நீலப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தனது முதல் வெற்றியை ருசித்துள்ளார்.
FILE

நீலப்படத்தில் நடித்து கொல்லைப்புறங்களில் மட்டுமே புளங்கி வந்தவர் இந்திப் படத்தின் மூலம் வரவேற்பறைக்கு அனுமதிக்கப்பட்டதே சன்னி லியோனைப் பொறுத்தவரை வெற்றிதான். அவரின் முதல் படம் ஜிஸம் 2 தோல்வி. இனிமேல் சினிமா கரியர் அவ்வளவுதான் என்று நினைத்தவருக்கு ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2 என பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஜாக்பாட் அட்டர் பிளாப்பானாலும் ராகினி எம்எம்எஸ் 2 பட்டையை கிளப்புகிறது.

மார்ச் 21 வெளியான இப்படம் முதல் நாள் வெள்ளிக்கிழமை 8.43 கோடிகளை வசூலித்தது. இதுவொரு சாதனை. எப்படி?
FILE

ஒரு ஹாரர் படம் - அதுவும் சன்னி லியோன் போன்ற ஸ்டார் வேல்யூ இல்லாத ஒருவர் நடித்தது முதல் நாள் எட்டு கோடியைத் தாண்டி வசூலிப்பது அபூர்வம். அதிலும் படம் வெளியான அன்று இந்தியா - பாகிஸ்தான் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி வேறு நடந்தது. அதையும் மீறி இப்படியொரு அட்டகாசமான வசூல்.

இரண்டாவது நாள் சனிக்கிழமை 7.5 கோடிகளை வசூலித்தது. ஆக, இரண்டு நாள்களில் 16 கோடி வசூல். இதனுடன் வெளியான காமெடி ஹாரர் படமான கேங் ஆஃப் கோஸ்ட்ஸ் இரண்டு தினங்களில் ஒரு கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

இதிலிருந்தே ராகினி எம்எம்எஸ் 2 வின் வெற்றி எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்