இந்தியா வருகிறார் ஸ்பீல்பெர்க்

புதன், 22 ஜூலை 2009 (17:06 IST)
சினிமா ச‌ரித்திரத்தில் மிக முக்கியமான ஒப்பந்தம் சென்ற வாரம் நியூயார்க்கில் கையெழுத்தானது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ட்‌‌ரீம் வொர்க்ஸ், அனில் அம்பானியின் ‌ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து படங்களை‌த் தயா‌ரிக்க உள்ளது.

இந்த கூட்டுத் தயா‌ரிப்புக்காக 850 மில்லியன் டாலர்களை அனில் அம்பானி தரப்பு முதலீடு செய்கிறது. இதில் 350 மில்லியன் டாலர்களை நேரடியாக அவரது குழுமம் வழங்குகிறது.

இந்த கூட்டுத் தயா‌ரிப்பின் படங்களை விநியோகிக்கும் வால்ட் டிஸ்னி 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. மற்றவை அதர்ஸ் பீப்பிள்ஸ் மணி. அதாவது பொதுமக்களிடமிருந்து பங்குகள் வழியாக வசூலிக்கப்படும்.

்‌‌ரீம் வொர்க்ஸின் சமீபத்திய படமான ட்ரான்ஸ்பார்மர்ஸ் - ‌ரிவென்‌ஜ் ஆஃப் தி ஃபாலன் உலகம் முழுவதும் சக்கைப்போடு போடுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மிகப் பெ‌ரிய கனவுகளை சாத்தியமாக்கும் என தெ‌ரிவித்துள்ளார் ஸ்பீல்பெர்க்.

ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி இந்திப் படங்களையும் தயா‌ரிக்கும் திட்டமுள்ளதாம் இவர்களுக்கு. இதற்காக இந்திய திரைக்கலைஞர்களை பார்த்து பேசுவதற்காக விரைவில் இந்தியா வரவிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

டூயட் என்ற பெய‌ரில் நம்மவர்கள் போடும் கூத்துக்கு ஸ்பீல்பெர்க் முற்றுப்புள்ளி வைத்தால் சிலை வைத்து கொண்டாடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்