சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இல்லையே தவிர பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு தனித்தனி அடைமொழி உண்டு. ஷாருக் கானுக்கு, கிங் கான்.
சிங் இஸ் கிங் படத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு அக்சய் குமாரை கிங் என்றுதான் அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்திப் படவுலகில் உள்ளவர்களும் செல்லமாக கிங் என்றே அவரை அழைக்கிறார்கள்.
சுவாரஸியம் என்னவென்றால் அக்சயின் காதல் மனைவி டுவிங்கிளும் கிங் என்றே கணவரை செல்லமாக அழைக்கிறார். இந்த அந்தரங்க விஷயத்தை அவருக்கு நெருக்கமானவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
அக்சயின் புதிய படம் சாந்தினி சவுக் டூ சைனா வெளியாகி உள்ளது. இந்தப் படம் வெற்றிபெற்றால் அவரை எப்படி அழைப்பார்கள்? சவுக் என்றா?