பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது சல்மான் கானின் வீர். அனில் சர்மா படத்தை இயக்குகிறார்.
சல்மான்கானுக்கு வீர் ஸ்பெஷலான திரைப்படம். அவரே முதன் முறையாக கதை எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக நடந்துவந்த வீர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம்?
பைனான்ஸ் பிரச்சனை என்கிறார்கள் பாலிவுட்டில். ஆனால், இதனை படத்தின் இயக்குனர் அனில் சர்மா மறுத்துள்ளார். படத்திற்கு பைனான்ஸ் பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறியிருப்பவர், சல்மான் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருவதால்தான் வீர் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
லண்டன் ட்ரீம்ஸ் முடிந்த பிறகு பிப்ரவரியிலிருந்து தொடர்ச்சியாக ஐம்பது நாட்கள் ராஜஸ்தானில் வீர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.