மாடல், வில்லன், ஹீரோ.. இப்போது தயாரிப்பாளர். அர்ஜுன் ராம்பாலின் வளர்ச்சியை பற்றிதான் சொல்கிறோம். இந்த ராக் ஆன் ஹீரோ முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்தின் பெயர், ஐ ஸீ யு.
படத்தின் விசேஷங்களுள் ஒன்று, நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய நண்பருமான ஹிருத்திக் ரோஷன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகராம் அர்ஜுன் ராம்பால். அவரது படம் வெளியானால் நடனங்களுக்காகவே பலமுறை பார்ப்பாராம். அந்தளவு ஹிருத்திக்கின் நடனத்துக்கு இவர் ரசிகராம்.
தனது முதல் தயாரிப்பான ஐ ஸீ யு-வில் ஹிருத்திக் ரோஷனை ஒரு பாடலுக்கு ஆட அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடனமாடியதை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன்.