வர்மாவின் மீடியா வார் !

சனி, 15 நவம்பர் 2008 (11:06 IST)
மீடியாக்களுடன் போர் தொடுக்க தயாராகிவிட்டார், ராம் கோபால் வர்மா.

வர்மாவின் எந்தப் படம் வெளியானாலும் போட்டுத் தாக்குவதென முடிவு செய்துள்ளன மீடியாக்கள். ஆக் படத்தை அட்டர் பிளாப்பாக்கியதில் கணிசமான பங்கு மீடியாக்களுக்கு உண்டு. அதற்குப் பிறகு வெளிவந்த வர்மாவின் சர்க்கார்ராஜ் படத்தையும் சரிவர மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நேரடி தாக்குதல் வர்மாவை ரொம்பவே கோபப்பட வைத்தது. மீடியா அரசியலை வைத்து படம் பண்ணப் போவதாக அவர் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான களத்தையும் தேர்வு செய்துவிட்டார்.

படத்துக்கு ரான் என பெயர் வைத்திருப்பவர் முக்கிய நடிகர்களையும் தேர்வு செய்துள்ளார். படத்தில் 24/7 என்ற சானலின் சொந்தக்காரராக நடிக்கிறார், அமிதாப்பச்சன். அவரது மகனாக சுதீப் நடிக்கிறார். சானலில் பணிபுரிகிறவர்களாக மனிஷா கொய்ராலாவும், ரித்தீஷ் தேஷ்முக்கும் நடிக்க உள்ளனர்.

அமிதாப்பை வைத்து வர்மா இயக்கும் ஐந்தாவது படம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்