ஹாலிவுட்டில் மிருகங்களை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில்?
வலைவீசினாலும் ஒரு படத்தை சுட்டிக்காட்ட முடியாது. இந்த நிலையை மாற்ற முன்வந்துள்ளார் மகேஷ் பட். விலங்குகள் யாரையும் நம்பியிருப்பதில்லை. ஆனால் மனிதர்கள் பல்வேறு விஷயங்களில் விலங்குகளை நம்பியிருக்கிறார்கள்.
விலங்குகளின் முக்கியத்துவத்தை வைத்து அடுத்தப் படத்தை எடுக்க இருக்கிறார் மகேஷ் பட். படத்தில் கிராஃபிக்ஸ் பிரதானமாக இடம்பெறுகிறதாம். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்துள்ளார் இவர்.
இந்தியாவை பொறுத்தவரை இது முதல் முயற்சி. வெற்றி முயற்சியாகவும் அமையட்டும்.