ரோஹன் சிப்பியின் ஆங்கிலப் படம்!

புதன், 7 ஜனவரி 2009 (19:59 IST)
தி பிரஸிடெ‌ண்ட் இஸ் கம்மிங். இதுதான் ரோஹன் சிப்பியின் புதிய படத்தின் பெயர். இதுவரை இந்தியில் படம் எடுத்தவர் ஒரு மாறுதலுக்கு ஆங்கில படம் எடுக்கிறார்.

படத்தில் நடிப்பவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் கதை இந்தியர்களை பற்றியதுதான். முக்கியமான வேடத்தில் கொங்கனா சென் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜர்னலிஸ்ட் வேடம்.

ஏற்கனவே ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறார் கொங்கனா. சிப்பியின் கதை நன்றாக இருந்ததால் மீண்டும் ஜர்னலிஸ்ட் மேக்கப் போட ஒத்துக் கொண்டுள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அவார்டை குறிவைத்து எடுக்கப்பட்டாலும் படத்தில் எ‌ண்டர்டெய்ன்மென்டுக்கு குறைவிருக்காதாம்.

அப்போ தை‌ரியமா எடுங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்