ராஜ்குமார் ஹிரானி படத்தில் மாதவன்!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:37 IST)
வெள்ளிக்கிழமை மும்பை மேரிஜான் ரிலீஸ். மாதவனுக்கு இது முக்கியமான படம். மராட்டி இயக்குனர் நிஷிகாந்த் படத்தை இயக்கியிருக்கிறார். இவரை தமிழுக்கு கொண்டு வந்ததிலும், இந்தியில் அறிமுகப்படுத்தியதிலும் மாதவனுக்கு கணிசமான பங்கு உண்டு.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், மும்பை மேரிஜான் ரசிகர்கள் மனங்களை மட்டுமின்றி விமர்சகர்களின் பாராட்டையும் வென்றிருக்கிறது.

நிற்க. மகிழ்ச்சியை மாதவன் கொண்டாடி கொள்ளட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். ராஜ்குமார் ஹிரானியின் த்ரீ இடியட்ஸில் நடிக்கிறார் மாதவன். மற்ற இரண்டு இடியட்கள் அமீர் கான், ஷர்மன் ஜோஷி. ரங்தே பாசந்திக்குப் பிறகு அமீர் கான், மாதவன் இணைந்து நடிக்கும் படம் இது.

ஐ.ஐ.டி. பட்டதாரிகள் மூன்று பேரை பற்றிய படம் த்ரீ இடியட்ஸ். புத்திசாலித்தனமான விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்