அ‌மிதா‌ப்ப‌ச்‌ச‌ன்- உய‌ர்‌ந்த ம‌னித‌ர்!

வியாழன், 26 ஜூன் 2008 (17:33 IST)
மு‌ம்பை‌க்கு எதுவுமே அ‌மிதா‌ப் செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்பது ரா‌ஜ் தா‌க்கரே‌யி‌ன் கு‌ற்ற‌ச்சா‌‌ற்று. தா‌க்கரே‌யி‌ன் இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ற்று அ‌மிதா‌ப் ‌வீ‌ட்டி‌ல் க‌ல்‌வீ‌ச்சாக எ‌திரொ‌லி‌த்தது நாடு அ‌றியு‌ம். ஆனாலு‌ம் எ‌தி‌ர் தா‌க்குத‌ல் நட‌த்த‌வி‌ல்லை அ‌மிதா‌ப். யா‌ர் எது சொ‌ன்னாலு‌ம், செ‌ய்தாலு‌ம் மு‌ம்பையை ‌வி‌‌ட்டு நகர மா‌ட்டே‌ன் எ‌ன்றா‌ர் உறு‌தியாக.

தீமை செ‌ய்தவ‌ர்‌க்கு அவ‌ர் நாண ந‌ன்மை செ‌ய்வது தானே உய‌ர்‌ந்த ம‌னித‌ர்களு‌க்கு அடையாள‌ம்! இ‌ந்‌தி‌ப் பட‌ம் தயா‌ரி‌த்தா‌ல் மூ‌ட்டை மூ‌ட்டையாக அ‌‌மிதா‌ப்ப‌ச்‌ச‌ன் பண‌ம் அ‌ள்ளலா‌ம். ஆனா‌ல், தனது ஏ‌பி கா‌ர்‌ப்பரேஷ‌ன் சா‌ர்பாக அவ‌ர் பு‌திதாக தயா‌ரி‌க்க‌யிரு‌ப்பது ஒரு மரா‌ட்டி பட‌ம்.

மரா‌ட்டி இய‌க்குன‌ர் சொ‌ன்ன கதை அ‌‌மிதா‌ப்‌பி‌ன் மனை‌வி ஜெயா ப‌ச்சனு‌க்கு ரொ‌ம்பவே ‌பிடி‌த்து‌‌ப் போக த‌ங்களது சொ‌ந்த‌ப் பட ‌நிறுவன‌ம் சா‌ர்பாகவே தயா‌ரி‌க்க‌ி‌ன்றன‌ர்.

மரா‌ட்டிய மா‌நில‌த்‌தி‌ற்கோ மொ‌ழி‌க்கோ அ‌மிதாப‌ச்ச‌ன் எதுவு‌ம் செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று இ‌னி எ‌ந்த தா‌க்கரேயு‌ம் ‌விர‌ல் ‌நீ‌ட்டி கு‌ற்ற‌ம்சா‌ற்ற முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்