இ‌ந்‌தி‌ப் பட‌‌த்‌தி‌ல் ‌சி‌ல்வ‌ஸ்ட‌ர் ‌ஸ்டாலோ‌ன்!

திங்கள், 16 ஜூன் 2008 (17:14 IST)
ஹா‌லிவு‌ட்டு‌க்கு‌ம் பா‌லிவு‌ட்டு‌க்கு‌மான இடைவெ‌ளி குறை‌ந்து வரு‌கிறது. Kambakkht Ishq போ‌ன்று நா‌ன்கு பட‌ங்க‌ள் வ‌ந்தா‌ல் இடைவெ‌ளி‌யே இ‌ல்லாம‌ல் போ‌ய்‌விடு‌ம்.

ச‌ஜி‌த் நடியா‌ட்வாலா தயா‌ரி‌க்கு‌ம் Kambakkht Ishq பட‌த்‌தி‌ல் ஹா‌லிவு‌ட் ‌சி‌னிமா‌வி‌ன் ‌ஸ்‌ட‌ண்‌ட்மேனாக நடி‌க்‌கிறா‌ர் அ‌க் ஷ‌ய் குமா‌ர். கதை‌க் களமே ஹா‌‌லிவு‌ட் எ‌ன்பதா‌ல், தொ‌ண்ணூறு சத‌வீத பட‌ப்‌பிடி‌ப்பு யூ‌னிவ‌ர்ச‌ல் ‌ஸ்டுடியோவு‌க்கு‌ள்ளேயே நடைபெறவு‌ள்ளது.

இ‌‌தி‌ல் ஹா‌லிவு‌ட் நடிக‌ர் ‌சி‌ல்வ‌ஸ்ட‌ர் ‌ஸ்டாலோ‌ன் நடிகராகவே வரு‌கிறா‌ர். அவ‌ரிட‌ம் கா‌ல்‌ஷ‌ீ‌ட் வா‌ங்‌கி ‌வி‌ட்டா‌ர் ச‌ஜி‌த்.

மிகு‌ந்த பொரு‌ட் செல‌வி‌ல் ‌பிரமா‌ண்டமாக தயாராகு‌ம் இ‌ந்த‌ப் பட‌த்தை இய‌க்குவது ச‌பி‌ர்கா‌ன். கே‌‌ள்‌வி‌ப்படாத பெயராக இரு‌க்குமே?

ச‌பி‌ர் கானு‌க்கு இதுதா‌ன் முத‌ல் படமா‌ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்