மதூர் பண்டார்கரின் பழக்கம்!
புதன், 4 ஜூன் 2008 (20:15 IST)
துள்ளல் இசை, ஜிகினா உடை, பிகினி நடிகை... பாலிவுட்டின் அநேக சினிமாவை இந்த ஃபார்முலாவுக்குள் அடக்கி விடலாம். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை மதூர் பண்டார்கரின் படங்கள். சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், ட்ராஃபிக் சிக்னல் என நான்கு படங்களுமே வித்தியாசமானவை.
ஃபேஷன் படத்தை தற்போது ப்ரியங்காவை வைத்து இயக்கி வருகிறார் மதூர். எடுத்த வரைக்கும் எப்படி இருக்கிறது என்று பார்க்க தயாரிப்பாளர்களுக்கு ஆசை. மற்ற இயக்குநர்கள் என்றால் வெல்கம் நோட்டீஸ் அடித்துத் தயாரிப்பாளரை வரவேற்பார்கள். ஃபேஷன் மதூரின் படமாயிற்றே. வெல்கமிற்கு பதில் நோ என்ட்ரி போர்டு மாட்டியிருக்கிறார்.
எடிட்டிங், ரெக்கார்டிங் முடிந்து படம் முழுமையான பிறகே யாருக்கு என்றாலும் படத்தைப் போட்டுக் காட்டுவேன். அதற்கு முன் ரஷ் பார்க்கத் தயாரிப்பாளருக்கும் தடாதான் என்று கறாராகக் கூறிவிட்டாராம் மதூர். ஃபேஷனின் இணைத் தயாரிப்பு மதூர் என்பதால் மெயின் தயாரிப்பாளர்களால் எதுவும் சொல்ல முடியாத நிலை.
மதூரின் கறார் கண்டிஷனை இந்தியாவில் புகழாத இயக்குநர்கள் இல்லை.