தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை தனது காதலர் ஜெரோம் மேத்யூவுடன் சேர்ந்து 300 துண்டுகளாக்கினாரே, நடிகை மரிய மோனிகா சூசைராஜ்...? க்ரைம் த்ரில்லருக்கு தோதான இந்தக் கதையை துண்டு போட்டு பிடித்திருக்கிறார் ஒரு இயக்குனர்.
நீரஜ் குரோவர், ஜெரோம் மேத்யூ எனும் இரு ஆண்களின் அதிகாரத்துக்கு பலியான மோனிகா, தற்போது கம்பிகளுக்குப் பின்னால்! யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பது மர்மமாகவே உள்ள நிலையில், இயக்குனர் மகேஷ்பட் இதனை படமாக்க உள்ளார்.
கொலை செய்வதற்கான இருவரின் மனோநிலை, அந்தச் சூழல் என மனோ ரீதியாக கதையை உருவாக்க இருக்கிறாராம். இப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்கள் படமாகும்போது, கதை கட்டிலைவிட்டு நகராது என்பது தெரிந்ததுதான்.
மகேஷ்பட் என்ன செய்யப் போகிறரார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.