செவ்வாய், 27 மே 2008 (20:29 IST)
கலர் டி.வி. என்ற புதிய சானல் ஒன்று சவால் நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்ப உள்ளது. இருக்கிற அனைத்துச் சானல்களும் ஏதாவது ஒரு சவால் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் போது, இதில் மட்டும் என்ன விசேஷம் என நினைக்கத் தோன்றும்.
விசேஷம் இருக்கிறது. சானலின் பெயருக்கு ஏற்ப பாலிவுட்டின் முன்னணிக் 'கலர்'கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
மேக்னா நாயுடு, யானா குப்தா, சயாலிபகத் என அந்தப் பட்டியல் நீள்கிறது. சும்மா நடிப்பதற்குப் பதில் இதுபோன்ற த்ரில்லான நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உற்சாகமாக இருக்கிறது என்கிறார்கள் இதில் பங்குபெற இருப்பவர்கள்.
இவர்கள் அனைவரையும் விட உற்சாகமாக இருக்கிறார் அக்ஷய் குமார். இந்தக் கவர்ச்சி நடிகைகள் பங்குபெறும் சவால் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கப் போகிறவரே இவர்தான்.
இதுபற்றிக் கூறும்போது பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல இந்த நிகழ்ச்சி அமையும் என்றார்.