மொழி இந்தி ரீ-மேக்கை ராதாமோகன் இயக்குவது உறுதியாகியிருக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் நடிக்கிறார்.
ஜோதிகாவின் வேடத்தில் யார் நடிப்பது என்பதே கேள்வி. அகன்ற கண்களும், அசாதாரண முகபாவமும் கொண்ட ஒரேயொரு இந்தி நடிகை கரீனா கபூர். அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்திய குஷியில் ஏற்கனவே ஜோதிகா வேடத்தில் நடித்துள்ளார் கரீனா. தமிழில் ஜோதிகா செய்ததில் கால்வாசி கரீனாவால் செய்ய முடிந்தது. மொழியிலாவது முழுமையை தொடுவாரா?
பிரகாஷ் ராஜ் வேடத்தில் போணி கபூரின் தம்பி அனில் கபூர் நடிக்கிறார். பிருத்வி ராஜ் வேடத்தில் அபிஷேக் பச்சன். ராதாமோகன் இயக்கப் போகும் முதல் இந்திப் படம் இது. மிரட்டுவாங்க பாஸ்!