ராம்கோபால் வர்மாவுக்கு கொஞ்ச நாளாக போகிற இடமெல்லாம் புதைகுழி. இவரின் புதிய படம் சர்க்கார் ராஜ் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வெளியாவதாக திட்டம். திட்டத்தை முடக்குவது போல் ஒரு வழக்கு.
சர்க்கார் ராஜின் கோ-புரொடியூசர் ஃபைனான்சியர் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார். வட்டியோடு இரண்டு கோடி. இது சர்க்கார் ராஜுக்காக வாங்கிய பணமில்லை.
வர்மாவின் கெட்ட நேரம், கடன் வாங்கியவர் சர்க்கார் ராஜின் இணை தயாரிப்பாளர் என்பதால் பணத்தை திருப்பித் தரும் வரை, சர்க்கார் ராஜை ரிலீஸ் செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்திருக்கிறார் கடன் கொடுத்த பைனான்சியர்.
ஆக, திட்டப்படி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் இணை தயாரிப்பாளர் இரண்டு கோடி தரவேண்டும். சரி, அவரிடம் இல்லையென்றால்?