ஷாருக் கானைப் பார்த்தால் நெம்பர் டூ-வாக இருப்பது எப்படி உள்ளது என்று கேட்பேன் என்று அமீர்கான் ஷாருக் கானை சீண்டி சில வாரங்கள்தான் ஆகிறது. அதற்குள் அடுத்த சீண்டல்.
அமீர் கான் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிலுள்ள நாயின் பெயர் ஷாருக்காம். இதனை அமீரே இணையதளத்தில் சொல்லிலியருக்கிறார். இது நான் வைத்த பெயரில்லை. இந்த வீட்டை பராமரித்து வந்தவர்கள் தங்கள் நாய்க்கு ஷாருக் என பெயர் வைத்திருந்தனர். வீட்டை வாங்கிய போது நாயும் இங்கேயே தங்கிவிட்டது என்று தனது கமெண்டுக்கு முட்டு கொடுத்துள்ளார்.
என்னுடைய நண்பர்கள், ஷாருக் என்ற பெயரில் நாய் இருப்பதால்தானே அந்த வீட்டை வாங்கினார் என்று கூட சொல்கிறார்கள் என மேலும் நக்கலடித்துள்ளார்.
நெம்பர் டூ கமெண்டுக்கே, அமீர்கானை வார்த்தையால் நொங்கு எடுத்தார் ஷாருக். இது நாய் விவகாரம். அமீருக்கு அடுத்த அடி காத்திருக்கிறது.