அமிதாப்பச்சன்- மிஸ்டர் போல்டு!
செவ்வாய், 6 மே 2008 (17:21 IST)
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் அமிதாப்பச்சன் உறுதியான ஆள். இல்லாவிடில் ராஜ்தாக்கரே, பால் தாக்கரே போன்ற திமிங்கலங்களின் தாக்குதலை சமாளிக்க முடியுமா?
யார் என்ன சொன்னாலும் செய்தாலும் மும்பையை விட்டு நகர மாட்டேன் என்று தாக்கரேக்களுக்கு பதிலடி கொடுத்தவர், அமைச்சர் அன்புமணியையும் காட்டமாக விமர்சித்தார். நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறிவரும் அன்புமணியின் கருத்துக்கு பதில் சொல்லும் விதமாக, முதலில் அதிகாரிகள் புகைபிடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் பச்சான்.
இவரை சுற்றும் இன்னொரு பிரச்சனை, ஓய்வு! வயதாகி விட்டது, பேசாமல் ஓய்வு எடுக்கலாமே என அமிதாப்பச்சனை துளைத்தெடுக்கின்றன மீடியாக்கள். கோடிகளில் சம்பாதிப்பவர் அத்தனை எளிதில் சினிமாவை விட்டு ஓடிப் போவாரா? எனக்கு எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது ஓய்வு எடுத்துக் கொள்வேன். வயசுக்கும் ஓய்வுக்கும் சம்பந்தமில்லை என மீடியாக்களின் வாயை அடைத்துள்ளார்.
மிஸ்டர் போல்டு பட்டத்தை அமிதாப்புக்கு தாராளமாக தரலாம்!