அமீர் கானுக்கு மங்கேஷ்கர் விருது!

விருது மழையில் நனைகிறார் அமீர் கான். தாரே ஜமீன் பர் படத்தை இயக்கிய பிறகு, அரை டஜன் விருதுகளாவது அமீர் கானை தேடி வந்திருக்கும். அவற்றிற்கு நடுவே, கம்பீரமாக மேலுமொரு விருது!

மங்கேஷ்வர் அறக்கட்டளை வருடா வருடம் சிறந்த கலைஞர்களுக்கு தினாநாத் மங்கேஷ்கர் பெயரில் விருது அளித்து கெளரவித்து வருகிறது.

திரைத் துறையில் வித்தியாசமான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திவரும் அமீர் கானை இந்த வருட தினாநாத் மங்கேஷ்கர் விருதுக்காக, மங்கேஷ்கர் அறக்கட்டளை தேர்ந்தெடுத்துள்ளது.

இம்மாதம் 24 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் விருது சான்றிதழையும், ஐம்பதாயிரம் ரொக்கப் பரிசையும் அமீர் கானுக்கு வழங்குகிறார், பாடகி லதா மங்கேஷ்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்