யூசஃப் ராசா கிலானி : நெகிழும் எல்லை!

வியாழன், 27 மார்ச் 2008 (20:23 IST)
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கிறார் யூசஃப் ராசா கிலானி. கிலானியின் பதவியேற்பு இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை குறிப்பாக கலாச்சார எல்லைகளை நெகிழ வைக்கும் என நம்புகிறார்கள். காரணம், கிலானி ஒரு கலா ரசிகர்.

2001ல் சிறையில் அடைக்கப்பட்டபோது, லதா மங்கேஷ்வரின் பாடலைக் கேட்டே பொழுதை போக்கியிருக்கிறார் கிலான். நடிகைகளில் ஐஸ்வர்யாராய் கிலானியின் மனம் கவர்ந்தவர். லேப் டாப்பிலேயே அவரது படங்களைப் பார்த்துவிடுவாராம்.

இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் திரையிட இன்றும் தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை. கிலானியின் பதவியேற்புக்குப் பிறகு இந்த இரும்புத்திரை மெல்ல இளகிவிடும் என்பது ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. எல்லாம் கிலானி கையில் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்