தனது திருமணச் செய்தியை வெளியிட்ட இணையதளம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி!
விஷயம் இதுதான், ரகசிய திருமணம் முடிந்த ஷில்பா கோயிலில் தரிசனம்! இப்படியொரு செய்தியை இணையதளம் ஒன்று வெளியிட்டது. அவ்வளவுதான்... கொதித்துப் போய்விட்டார் ஷில்பா.
குடும்பத்தோடு ஷில்பா ஷெட்டி, சாய்பாபா கோயிலுக்குச் சென்றதைத்தான் அந்த இணையதளம் இப்படி திரித்து வெளியிட்டது. காரணம், ஷில்பாவுடன் சென்ற அவரது நண்பர் ராஜ் குந்த்ரே.
ரகசிய திருமணம் முடிந்துவிட்டே இருவரும் கோயிலுக்கு வந்தனர் என இணையதளமே ஒரு கதை கட்டிவிட்டது. கோபமான ஷில்பா ஷெட்டி சைபர் க்ரைமில் புகார் கொடுத்திருக்கிறார்.
நாற்பது வயசுக்குப் பிறகும் கல்யாணமாகாமல் இருக்கிறாரே என்று இணையதளமே பற்ற வைத்த செய்தி, அதனையே பதறவைத்திருக்கிறது.