பிரியங்கா சோப்ராவின் புதிய பேடம் ஃபேஷன். புஜபல நடிகர்கள், கலர்ஃபுல் நடனங்கள் என கற்பனையில் மிதக்கும் பாலிவுட் படங்களுக்கு நடுவில், யதார்த்தத்தை அணுகி ஆராயும் மதூர் பண்டார்கர் ஃபேஷனின் இயக்குனர்.
ஃபேஷன், மாடல் ஒருவரின் கதை. படத்தின் இறுதிக் காட்சயில் இந்த மாடல் கர்ப்பம் தரிப்பதாக கதை. மாடலாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு கர்ப்பத்தில் உடன்பாடில்லை. கதையிலிருந்து கர்ப்பத்தை கலைக்கும்படி அவர் மதூரை மன்றாடி கேட்கிறார்!
பாலிவுட்டில் கிளம்பிய இந்த காலில்லாத வதந்தி பிரியங்காவை கடுப்பேற்றியிருக்கிறது. ஃபேஷனில் தான் கர்ப்பம் தரிப்பதாக காட்சியே இல்லை. பிறகு யார் இதுபோன்ற ஆதாரமில்லாத புளுகுகளை அவிழ்த்து விடுகிறார்கள் என ஆவேசப்படுகிறார்.
தபுவுக்கு சாந்தினி பார் அமைந்தது போல், பிபாசா பாசுவுக்கு கார்ப்பரேட் பெயர் வாங்கிக் கொடுத்தது போல் மதூரின் ஃபேஷன் தனக்குப் பெருமை சேர்க்கும் என பிரியங்கா நம்புகிறார். ஃபேஷன் அவருக்கு பிடித்தமான கதைதான். கர்ப்பம் போன்ற காஸிப்ஸ்தான் பிரியங்காவை கலங்கடிக்கிறது.