அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார் ராகேஸ் ரோஷன். தயாகம் திரும்பிய அவருடன் வதந்தி ஒன்றும் கூடவே வந்துள்ளது.
தனது அடுத்தப் படத்துக்கான லொகேஷன் பார்க்க அமெரிக்கா சென்ற ராகேஷ் ரோஷன், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டுள்ளார்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள நேரம் என்பதால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தகவலை ராகேஷ் ரோஷன் மறுத்துள்ளார். தான் நாசாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவில்லையென்றும், அமெரிக்கா சென்றது அதற்காக இல்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
அஷ¤தோஷ் கெளவாரிகரின் Swades படம் மட்டுமே நாசாவில் படமாக்கப்பட்ட ஒரே இந்தியப் படம்.