மதூர் பண்டார்கரின் ஃபேஷன்!

செவ்வாய், 11 மார்ச் 2008 (19:59 IST)
இந்திய சினிமாவின் நல்ல இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த சொற்ப விரல்களில் ஒருவர் மதூர் பண்டார்கர்.

பண்டார்கரின் முதல் படம் சாந்தினி பார். இதில் நடித்ததற்காக உலகம் முழுவதும் பறந்து பறந்து விருதுகள் வாங்கினார் தபு. பேஜ் த்ரீ, கார்ப்பரேட், ட்ராஃபிக் சிக்னல் படங்களிலும் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் மதூர்.

இவரது புதிய படம் ஃபேஷன். ஃபேஷன் உலகின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களை உள்ளது உள்ளபடி சொல்லும் படம். ஃபேஷனின் நாயகி, மாடலாக வரும் பிரியங்கா சோப்ரா.

கார்ப்பரேட் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், பேஜ் த்ரீயில் உயர்மட்டத்தில் உள்ள மனிதர்களின் பொய் முகமூடிகளையும் தைரியமாக அம்பலப்படுத்தினார் மதூர். ட்ராஃபிக் சிக்னல், மும்பை சிக்னலில் பிச்சையெடுத்தும், ஏமாற்றியும், சிறு தொழில் செய்தும் பிழைக்கும் விளிம்பு நிலை மக்களையும், அவர்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிழல் உலகையும் பற்றியது.

ஃபேஷனிலும் பண்டார்கரின் பணி, உண்மையை அம்பலப்படுத்துவதாகவே இருக்கும் என்பதால், படத்தைக் குறித்த எதிர்பார்ப்பும், பயமும் சம அளவில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்