அஜானுபானுவான உடம்புடன் ஆக்சன் செய்யவே எந்த நடிகரும் விரும்புவார். சுனில் ஷெட்டி வேறுமாதிரி. ஆரம்ப காலத்தில் அதிரடிப் படங்களில் நடித்தவர், காமெடி படங்களை விரும்புகிறவராக மாறியிருக்கிறார்.
அடுத்து இவரது நடிப்பில் வெளிவரயிருக்கும் ஒன் டூ த்ரீ படமும் காமெடி படம்தான்! ஏனிந்த நகைச்சுவை மோகம் என்று கேட்டால், 'ரசிகர்களுக்குப் பிடிக்கிறது அதனால் நடிக்கிறேன்' என் சிம்பிளாக பதிலளிக்கிறார். 'காமெடிப் படங்களை மக்கள் குடும்பத்துடன் பார்க்க விரும்புவதும் முக்கிய காரணம்' என்கிறார்.
ஒன் டூ த்ரீயில் மார்க்கெட்டிக்ங் எக்ஸிக்யூட்டிவாக வருகிறார் சுனில் ஷெட்டி. நேர்மையான விற்பனை பிரதிநிதி. இவரது நேர்மையே நண்பர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. விரையில் வெளியாக இருக்கும் இந்த படமும் ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தெரிவித்தார் சுனில் ஷெட்டி.
இவரது தயாரிப்பு நிறுவனம் பாப்கார்ன் என்டர்டெயின்மெண்ட் பாலாஜி டெலிபிலிம்சுடன் இணைந்து மூன்று படங்கள் தயாரிக்கிறது. முதல்படம் மிஷன் இஸ்-தான்ஃபுல்.