அக்பர் சக்ரவர்த்தி ஜோத்தாவை காதலிக்கவில்லை, ஜோத்தா என்றொரு ராணியே இல்லை, வரலாற்றை திரித்து ராஜ்புத் வம்சத்தையே வம்புக்கு இழுக்கிறார் இயக்குனர் அஷிதோஷ் கவாரிகர் என்று ஒருபுறம் போராட்டம் நடந்து வருகிறது. ராஜஸ்தானில் படமே வெளியாகவில்லை.
ஆனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் ஊதி தள்ளியிருக்கிறது ஜோத்தா அக்பர். வெளியான முதல்வாரத்தில் இந்தியாவில் மட்டும் இந்த படம் வசூல் செய்ததுள்ளது இருபது கோடியே பதிமூன்று லட்சங்கள்! இரண்டாவது வாரத்தையும் சேர்த்து மொத்த வசூல் 32 கோடிகள்.
உள்ளாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் ஜோத்தா அக்பர் கலெக்சனில் முதலிடம். சரித்திர படம் வசூலிலும் சரித்திரம் படைத்திருக்கிறது.