ரன்பிர் கபூர், மகேந்திர சிங் தோனி ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டாலும், தீபிகா படுகோனின் இதயம் கவர்ந்தவர் யுவராஜ் சிங்தான்!
இதனை சொல்வது மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ராஜ் கிளாசிக் அபார்ட்மெண்ட்வாசிகள்.
ராஜ் கிளாசிக் அபார்ட்மெண்டில் பங்கஜ் குமார், ஷாஹித் கபூர், ஆயிஷா தாகியா போன்ற பாலிவுட் பிரபலங்கள் பிளாட் வாங்கியுள்ளனர்.
யுவராஜ் சிங் - தீபிகா ஜோடியும் இங்கு பிளாட் இங்கு வாங்கும் முடிவில் உள்ளது. சமீபத்தில் இருவரும் ஒன்றாக ராஜ் கிளாசிக் அபார்ட்மெண்டுக்கு வந்திருந்தனர். பி-விங் கட்டடத்தில் அவர்கள் தங்களுக்கென பிளாட்டை தேர்வு செய்துள்ளனர்.
தொந்தரவில்லாத சூழலுக்காகவே பாலிவுட் பிரபலங்கள் புறநகர் பகுதியில் வீடு தேடுகின்றனர். இவர்களால் அருகில் குடியிருப்பவர்களுக்கும் தொந்தரவு இல்லாததால் அபார்ட்மெண்ட்வாசிகள் பிரபலங்களின் வருகையை அதிகமாகவே விரும்புகிறார்கள்.
விரைவில் தாஜ் கிளாஸிக்கிற்கு வர இருக்கும் மற்றொரு பிரபலம் பிரியங்கா சோப்ரா!