உலகம் முழுவதுமாக பார்த்தால் அமீர் கான் படங்களின் ஒட்டுமொத்த வியாபாரம் 100 கோடி! இதனாலேயே கான் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதை அறிய காத்திருக்கிறார்கள்.
கஜினி ரீ-மேக்கைத் தொடர்ந்து அமீர் கான் வினோத் சோப்ராவின் படத்தில் நடிக்கிறார் என்று வதந்தி கிளம்பியது. அது வதந்தி அல்ல உண்மைதான் என்று இப்போது ஒத்துக் கொண்டிருக்கிறார் அமீர் கான்.
வினோத் சோப்ரா தயாரிப்பில் ராஜு கிர்ரானி படத்தை இயக்குகிறார். அமீர் கான் ஆசைப்படும் வித்தியாசமான கதை. தலைப்பு தலைவிட வித்தியாசம். Idiots... அதாவது முட்டாள்கள் என்பதுதான் படத்தின் பெயரே!