ஐஸ்வர்யா ராய் படத்திற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (19:29 IST)
webdunia photoFILE
ஹ‌ிரு‌த்‌தி‌க் ரோஷ‌ன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோத்தா அக்பர்' இந்தி படத்திற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் 'இந்திய பண்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது' என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முகலாய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் அஷுதோஸ் கோவரிகர் இயக்கியுள்ளார். இவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லகான்' படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அக்பராக ‌ஹ‌ிரு‌த்‌தி‌கரோஷ‌னும், ஜோத்தாவாக ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர்.

அமெரிக்காவின் 115 அரங்குகளில் திரையிடப்பட்டு சாதனைப் படைத்துள்ள 'ஜோத்தா அக்பர்' படத்தை இந்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று அமெரிக்கவாழ் இந்தியர்களபோர்க்கொடி தூக்கியுள்ளனர்.

'இந்த படத்தில் அக்பரது மனைவியாக ஜோத்தாபாய் காட்டப்பட்டுள்ளார். ஆனால், அவர் உண்மையாக அக்பரின் மகன் ஜஹாங்கீரின் மனைவி. அக்பர், ஜோதாபாய்க்குமான உறவதவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மதிக்கும் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது' என்று அமெரிக்கவாழ் இந்திய போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டக் குழுவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்