சந்திர நடிகைக்கு சனி திசை...

திங்கள், 10 மார்ச் 2008 (15:41 IST)
சந்திர நடிகைக்கு சனி திசை. நடிக்க ஒரு படம் இல்லை. பல கம்பெனிகளில் முட்டிப் பார்த்தவர், இரவானால் இளம் ஹீரோக்களுக்கு ஃபோனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்கிறார். பத்து பைசா செலவில் படத்தில் நாயகி வேடம் கேட்கும் நடிகையை யாரும் சீண்டுவதாக இல்லை.

பாட்டெழுதிக் கொண்டிருந்தவர் நடிக்க வந்த பிறகு நாலா திசையிலும் பிரச்சனைகள். சிவப்பு தேசத்திற்கும் சென்று படப்பிடிப்பு நடத்தி வந்ததில் பாதி பட்ஜெட் காலி என்று தயாரிப்பாளர் புகார். படப்பிடிப்பின் நடுவில் கவிஞர் இயக்குனரின் வேலையில் தலையிட்டு தனது வித்தையை காட்டுவதாக இன்னொரு புகார். புகாரின் பளு தாங்காமல் வண்டிமாடாக தத்தளிக்கிறது கொண்டிருக்கிறது படம்.

தெலுகு தேசத்தில் முன்னணியில் இருக்கும் மலையாள மோகினி மீது அங்குள்ள பெரிய தயாரிப்பாளருக்கு மையல். தனது அன்புப்பரிசாக நடிகைக்கு வெளி நாட்டு கார் ஒன்றை பரிசளீள்த்திருக்கிறார். காரின் விலை ஏறக்குறிய ஒரு கோடி. இறாக்குமதி காருக்கான பதில் மரியாதையும் பக்காவாக நடந்து முடிந்திருக்கிறது.

கோல்டு கடை நடிகரின் இன்வெஸ்டிகேஷன் படத்துக்கு ஏகப்பட்ட 'கட்' கொடுத்திருக்கிறது கத்தரிக்கோல் டிபார்ட்மென்ட். ஏற்கனவே கத்திரிக்கோல் பார்ட்டிகளுக்கும் படத்தின் "மணி"யான இயக்குனருக்கும் ஆகாது. இதனால் கத்தரிக்கு சம்மதிக்காதவர் படத்தை மும்பைக்கு அனுப்பி கத்திரிக்கோலின் நிழல் கூட படாமல் படத்தை ரிலீஸ் செய்கிறேன் பார் என்று சவால் விடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் கதை, திரைக்கதையில் புலியாக இருந்தவர் முழுக்க துணி வியாபாரி ஆகிவிட்டார், சினிமாவை நம்பினது போதும் என்று மனைவியின் கார்மென்ட்ஸ் ஃபேக்டரியில் தனது சிந்தனையை செலுத்தி வருகிறார். ஃபிலிமை நம்புவதை விட துணியை நம்பலாம் என்பதுதான் புலியின் புதிய புராணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்