பட்டையை கிளப்பும் த கிரான்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

திங்கள், 17 மார்ச் 2014 (12:10 IST)
இந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது வெஸ் ஆன்டர்சனின் த கிரான்ட் புடாபெஸ்ட் ஹேட்டல். எட்டாவது இடத்தில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
FILE

ஃபாக்ஸ் செர்ச்லைட் த கிரான்ட் புடாபெஸ்ட் ஹோட்டலை லிமிடெட் வெளியீடாக நான்கு திரையரங்குகளில் வெளியிட்டது. வார இறுதியில் கூட்டம் ஏகமாக அம்முயது. அதைப் பார்த்தவர்கள் 4 என்பதை 66 திரையரங்குகளாக உயர்த்தினார்கள்.

தியேட்டர் எண்ணிக்கை உயர்ந்த பிறகும் கூட்டம் குறையவில்லை. சென்ற வார இறுதியில் மட்டும் 3.6 மில்லியன் டாலர்களை வசூலித்து எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 க்குள் வருகிற படங்கள் ஆயிரத்துக்கு மேல் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களாகதான் இருக்கும். இரண்டாயிரம் மூவாயிரம் எல்லாம் சாதாரணம்.
FILE

அப்படியிருக்க, வெறும் 66 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் டாப் 10 -ல் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட்டைப் பொறுத்தவரை இது எட்டாவது அதிசயம்.




வெப்துனியாவைப் படிக்கவும்