கார் விபத்தில் சமீபத்தில் மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வால்கரின் கடைசிப் படம் இந்தியாவில் வெளியாகிறது.
FILE
பால் வால்கரின் எதிர்பாராத மரணம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி அவரின் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பால் வால்கரின் தாராள உள்ளத்தைப் பற்றியும், அவர் செய்து வந்த உதவிகள் குறித்தும் தெரிய வந்த பிறகு இந்திய ரசிகர்களின் கூடுதல் அனுதாபம் அவருக்கு கிடைத்தது.
பால் வால்கர் கடைசியாக நடித்த பிரிக் மேன்சன்ஸ் இந்தியாவில் ஏப்ரல் 25 வெளியாகிறது. பிவிஆர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகிறது.
இதுவொரு ஆக்சன் படம். அண்டவர் கவர் போலீஸ் ஆபிசராக இதில் பால் வால்கர் நடித்துள்ளார். படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளவர், இதுபோன்ற ஆக்சன் படங்களின் சக்ரவர்த்தி லுக் பெஸான்.
யுஎஸ்ஏ-யில் படம் வெளியாகிற அதே தினம் இந்தியாவிலும் இப்படம் வெளியாகிறது.
FILE
இதுதான் பால் வால்கரின் கடைசிப் படமா என்றால் இல்லை. பாஸ்ட் அண்ட் பியூரியஸின் ஏழாவது பாகத்திலும் பால் வால்கர் நடித்துள்ளார். அவரின் பகுதிகள் முழுமையாக படமாக்கப்படும் முன்பே அவர் மரணமடைந்தார். எனினும் அவரது பகுதியை நீக்கவோ, அவர் இறந்தது போல் காட்டவோ போவதில்லை என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் வான் கூறியுள்ளார்.
பிரிக் மேன்சன்ஸின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாலேயே இந்தப் படத்தை அவரின் கடைசிப் படம் என்று விளம்பரப்படுத்துகிறது பிவிஆர் பிக்சர்ஸ்.